கனரக வாகனங்கள் செல்ல தடை..!! போக்குவரத்துகள் மாற்றம்…!!
சென்னையில் கனரக வாகனங்கள் செல்ல தமிழக போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 12ம் தேதி முதல் பலரும் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். இதுவரையில் 12 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இன்று முதல் பலரும் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ள நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வாகன நெரிசலை குறைக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும் என்றும், கனரக வாகனங்கள் இல்லாத சாதாரண வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல வேண்டும் என்றும் வெளியூரில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரனூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல இன்று பகல் 2 மணி முதல் ஜனவரி 20ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் வசதிக்கேற்ப 3315 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..