இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள குறிப்புகள்..!
மிளகாய் பொடி அரைக்கும்போது சிறிது எள், கடுகு, மிளகு ஆகியவற்றை லேசாக வறுத்து அதில் சேர்த்து அரைத்தால் நல்லா சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
பால்கோவா, கேசரி, தேங்காய் பர்பி ஆகிய இனிப்பு வகைகளை செய்யும்போது அடி பிடிக்காமல் இருக்க நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்யலாம்.
காய்கறி பொரியல் செய்யும்போது எண்ணெய் அதிகமாகி விட்டால் அதில் சிறிது கொள்ளு பொடியை தூவி விட்டால் எண்ணெயை உறிஞ்சிவிடும்.
உடலில் இருக்கும் நஞ்சை வெளியேற்ற அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்த்து கொள்ளலாம்.
பொன்னாங்கன்னி கீரை பொரியலில் இரண்டு முட்டை உடைத்து ஊற்றி செய்தால் கீரை பொரியலின் சுவை அருமையாக இருக்கும்.
வேப்பம் பூவை நெய்யில் வறுத்து பின் அதனை சாதத்தில் போட்டு உப்பு சேர்த்து சாப்பிட உடலில் காய்ச்சல் வராது.
வெள்ளை பூசணியின் தோலை கீழே போடாமல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு காயவைத்து பின் எண்ணெயில் பொரித்து இட்லி பொடியுடன் சேர்த்து அரைத்து சாப்பிடலாம்.
தோசை மாவில் இரண்டு வெண்டைக்காயை சேர்த்து அரைத்தால் மாவு பஞ்சுபோல இருக்கும்.
வற்றல், வடகம் செய்யும்போது கொஞ்சமாக பால் சேர்த்து செய்தால் வெள்ளையாக இருக்கும்.
தேங்காயை உடைத்தவுடன் கழுவி ஃபிரிஜ்ஜில் வைக்கும்போது அதன் மேலே பிசுபிசுப்பு இருக்காது.