தமிழர்கள் அல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என பா.ம.க. எம் எல் ஏ வெங்கடேஸ்வரன் விளையாட்டு துறை மானியை கோரிக்கையில் பேசியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் அதிக இளைஞர்களால் ஈர்க்கப்படும் போட்டியான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.இதில் தமிழகத்தை சார்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற அணியும் உள்ளது
தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை ஆனால் தமிழக அநீ என்பது போல விளம்பரம் செய்து நம் மக்களிடம் பெரும் வர்த்தக லாபத்தை அடைகிறது
தமிழக வீரர்கள் இல்லாத இந்த சிஎஸ்கே அணியை தமிழக அரசு விளையாட தடை செய்ய வேண்டும் என விளையாட்டு துறை மானிய கோரிக்கையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கோரிக்கை