குற்றால அருவியில் 2வது நாளாக குளிக்க தடை.. ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்..!
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு மழை பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகலான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரத்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதில் கொண்டு மெயின் அருவி,ஐந்தருவி, பழைய குற்றாலம், அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
2வது நாளக குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள் சிற்றருவி, மற்றும் புலியருவியில் குளிக்க அணுமதிக்கபட்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்