பார்லி அரிசியும் – ஆரோக்கியமும்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு ஊட்டசத்து நிறைந்தது பார்லி அரிசி.
இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
இதில் அடங்கியுள்ள சில மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.
பார்லி அரிசியில், 3.3 கிராம் புரதமும், 19.7 சதவிகிதம் கால்சியம் மற்றும் 0.4 சதவிகிதம் கொழுப்பு சத்தும் நிறைந்துள்ளது. மேலும் இதில் மெக்னீசியம், நியாசின், மற்றும் ஆன்டி நியூட்ரியன்கள் அடங்கியுள்ளது.
* காய்ச்சல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு, வாரத்திற்கு மூன்று முறை, பார்லி அரிசி எடுத்துக்கொள்ளலாம்.
* வாரத்திற்கு ஒருமுறை பார்லி கஞ்சி எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து விடும்.
* இதய நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கறைக்க உதுவும்.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொண்டால், ரத்த சர்கரையின் அளவை குறைத்துவிடும்.
* செரிமானத்தை சீராக்கி மலசிக்கலை சரி செய்ய உதவுகிறது.
* உடலில் உள்ள பித்த அமிலங்களை பராமரித்து, பித்தப்பை கற்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
* உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைபவர்கள்.., இதை தொடர்ந்து குடிக்கலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.