அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஐபிஎல் ஏலம் அனைத்து ரசிகர்களையும் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
2023ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் நடைபெற்றது. சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சாம்கரண் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புவரா பெரும் எதிர்பார்ப்புடன் இந்த ஏலத்தை பார்த்து வந்தனர். ஆனால் அவரை பஞ்சாப் அணி 18.5 கோடிக்கு வாங்கி இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்தில் மிகுந்த மதிப்பு மிக்க வீரராகினார். அதையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் இரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த நட்சத்திர இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே அணி 16 கோடிக்கு வாங்கி அசத்தியது. மேலும், நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளரான கைல் ஜமிஷனை அடிப்படை விலை 1 கோடி வாங்கி மீண்டும் அசத்தியது. இதனால் சாம் கரணை இழந்த சோகத்திலிருந்து சிஎஸ்கே ரசிகர்களை முற்றிலும் அதை மறக்கும் படி ஏலத்தின் முடிவில் சிஎஸ்கே அணி சிறப்பான வீரர்களை வாங்கியது. மேலும் இந்தியா அணியின் அனுபவமிக்க வீரர் அஜின்க்யா ரஹானேவையும் அடிப்படை விலை 50 லட்சத்திற்கு வாங்கியது.
மேலும் இந்த ஆண்டு நிறைய போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நாடாகும் என்பதால் மைதானத்திற்கு தேவையக்கேற்றபோல் வீரர்களை மாற்றியமைக்கும் படி அணியை கட்டமைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு தோனி விளையாடும் கடைசி வருடம் என்பதால் அவருக்கான இடத்தில் ஒரு கேப்டனாகவும் பென் ஸ்டோக்ஸ் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள உத்தேச லெவேனாக ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே, மொயின் அலி, அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ்,தோனி, ஜடேஜா,துபே, தீபக் சஹர், மகேஷ் தீக்சனா, முகேஷ் சௌத்திரி. என்று எதிர்பார்க்கப்பட்டாலும். அன்றைய சூழலுக்கு ஏற்றார் போல் வீரர்கள் மாற்றப்படுவார்கள். பேட்டிங் நன்றாக இருந்தாலும் பந்துவீச்சு கொஞ்சம் வலுவிழந்து காணப்படுகிறது. கடைசி சில ஒவர்களை யார் போடுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.