பீன்ஸ் பயறு வகைகளும் அதன் நன்மைகளும்..!
பீன்ஸ் பலவித ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இந்த பீன்ஸ் பத்து வகைகளை கொண்டது. ஒவ்வொரு பீன்ஸும் தனிச்சுவையும் தனித்தனி சத்துக்களையும் பெற்றிருக்கும்.
அப்படி பத்து வகையை சார்ந்த பீன்ஸ் வகைகளை பார்க்கலாம்.
அட்ஸுகி பீன்ஸ்: இந்த வகை பீன்ஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள், புரோட்டீன் இருக்கிறது. இந்த பீன்ஸ் உடலில் வீக்கத்தை குறைக்கவும், சரியான செரிமானத்திற்கும், தசைகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
பின்டோ பீன்ஸ்: இந்த வகை பீன்ஸில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சமைநிலையில் வைக்கிறது.
பட்டாணி: இது தாவர வகையில் புரோட்டீனை அதிகமாக தரக்கூடியது. இதில் வைட்டமின் சி,ஏ,கே ஆகியவை அதிகமாக இருக்கிறது. இது கண்களின் ஆரோக்கியத்திற்கும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
சோயா பீன்ஸ்: இதில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது. வெஜிட்டேரியனில் இது மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதில் இருக்கும் ஐசோஃபிளவோன்ஸ் என்ற கூட்டுப்பொருள் சிலவகை கேன்சரை தடுக்க வல்லது.
கொண்டக்கடலை: இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் சத்துக்கள் உடலில் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய கனிம சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.
காராமணி: இந்த பயிரில் இருக்கும் ஃபொலேட் என்ற பொருள் மூளையின் ஆரோக்கியத்தை காக்கிறது. பிறப்பிலே உண்டாகும் உடல் கோளாறுகளை கூட குணப்படுத்தும் இந்த காராமணி. இதில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளுக்கு வலுவளிக்கிறது.
நவி பீன்ஸ்: இந்த வகையில் நார்ச்சத்தும் குறைவான அளவில் கொழுப்பு சத்தும் உள்ளது எனவே இவை இதயம் ஆரோக்கியத்தை காப்பதில் பெரிதும் பயனாக உள்ளது. மேலும் இது சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.
லீமா பீன்ஸ்: இதில் இருக்கும் பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். இதில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளதால் நீண்ட நேரம் உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியது.
பிளாக் பீன்ஸ்: இந்த வகையில் அதிகமாக புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலுக்கு செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. உடலில் உண்டாகும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
கிட்னி பீன்ஸ்: கிட்னி பீன்ஸில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது ரத்தம் மூலமாக உடல் முழுவதும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் முழுக்க கொண்டு சேர்க்கிறது.