வெளியானது ரஜினியின் மேன் vs வைல்ட் மோஷன் போஸ்டர் – #ThalaivaOnDiscovery

பிரபல தொகுப்பாளர் பியர் கிரில்ஸு தொகுத்து வழங்கும் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற மோசன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பியர் கிரில்ஸின் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு அசத்தினார். இந்நிகழ்ச்சி விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்தும் பியர் கிரில்ஸும் ஜீப் ஒன்றில் அமர்ந்திருப்பது போன்றும், ரஜினி தனது வழக்கமான ஸ்டைலில் போஸ் கொடுத்தபடியும் உள்ளார். மேலும், தலையில் கறுப்பு நிற தொப்பியுடன் அந்த படத்தில் காணப்படுகிறார். இந்த மோஷன் போஸ்டரை குறிப்பிட்டுள்ள பியர் கிரில்ஸ், ரஜினியின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதோ தயாராகிக் கொண்டிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

நான் நிறைய பிரபலங்களோடு பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் இது எனக்கு சிறப்புமிக்க ஒன்று, லவ் இந்தியா என்று குறிப்பிட்டுள்ளார் பியர் கிரில்ஸ். இதனுடன் ThalaivaOnDiscovery என்கிற ஹேஸ்டேக்கையும் இணைத்துள்ளார். ரசிகர்கள் இந்த ஹேஸ்டேக்கில் பதிவிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

What do you think?

உசேன் போல்ட்டை வீழ்த்திய மேலும் ஒரு கம்பாலா வீரர்

விபத்தில் சிக்கிய அஜித்; வைரலாகும் வீடியோ – #GetWellSoonThala