மாடல் அழகி..! 2கே கனவு கன்னி..! பவித்ரா லக்ஷ்மி ஆட்டோகிராப் பக்கம்…!
கோயம்புத்தூரைச் சேர்ந்த பவித்ரா லட்சுமி தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான இவர் தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவருக்கென தனி ரசிகர் பட்டளத்தை உருவாக்கினார்.
மேலும் அந்நிகழ்ச்சி இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பின்னர் நடிகர் சதிஷ் நடித்திருந்த நாய்சேகர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து நல்ல விமர்சனங்களையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.
தனக்கு கிடைத்த புகழை கூட .., இது எனக்கான புகழ் அல்ல என்னோடு இருந்து உழைத்தவர்களுக்கும் என சொல்லும் மனம் கொண்ட நம் பவித்ரா லக்ஷ்மி.. முதன் முதலில் கூறும் படங்கள் மூலம் மீடியாவில் என்ட்ரி கொடுத்தார்…
ஒரு பெண் நினைத்தால் அவளின் திறமையை வைத்து கூட என்றாவது ஒரு நாள் சாதித்து விட முடியும் என்ற நம்பிக்கையை பலரின் மனதில் விதையாக விதைத்தவர்..
“உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற தொகுப்பின் மூலம் அறிமுகமாகி..” சிறு சிறு குறும்படங்கள் மூலம்.., தன் திறமையை வெளிப்படுத்த தொடங்கினார்..,
இந்த அழகிய பெண்.., மாடல் அழகி என்ற பெயருடன்.., பயணித்து கொண்டிருந்த போது “குக்வித் கோமாளி என்ற ஷோ மூலம்.., ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி.., தன் தாயின் கனவான நடிகை என்ற கனவை மலையாளத்தில் வெளியான “உல்லாசம்” படத்தின் மூலம் நினைவாக்கினார்…
மிஸ் மெட்ராஸ் 2015 மற்றும் குயின் ஆஃப் இந்தியா 2016 ஆகிய போட்டிகளில் வென்று பட்டங்களையும் பெற்றுள்ள அழகே பொறாமை படும் நம்ப பவித்த லட்சுமி தனது 30வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.அவருக்கு நமது மதிமுகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
-பவானி கார்த்திக்