முகத்தின் இதயமான உதடுகளை அழகாக்க இது போதும்..!
நம் வீட்டில் நாம் தயாரிக்கும் லிப் பாம் எந்தவிதமான கெமிக்கல், நிறங்கள், வாசனை திரவியங்கள் எதுவும் சேர்க்காமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சிறந்த லிப் பாம் ஆகும்.
இந்த இயற்கை முறையில் தயாரிக்கும் லிப் பாம் உங்கள் உதடுகளை மென்மையாகவும், ஈரப்பதமாகவும, அழகாகவும் வைத்திருக்கிறது.
வீட்டிலேயே லிப் பாம் எப்படி தயாரிக்கலாம் என இப்போது பார்க்கலாம்.
லிப் பாம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
- கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி
- வைட்டமின் ஈ மாத்திரை – 1
- தேன் – ½ தேக்கரண்டி
- தேன் மெழுகு – 1 தேக்கரண்டி
- பீட்ரூட் சாறு – 5 தேக்கரண்டி
செய்முறை:
- பீட்ரூட்டை அதன் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அதன் சாறை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கற்றாழையை நறுக்கி அதன் தோலை நீக்கி அதன் ஜெல்லை தனியே பிரித்து எடுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் பீட்ரூட் சாறு ஆகியவற்றை கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
- சிறிது கொதித்ததும் அடுப்பை அணைத்து ஆறவைக்கவும்.
- அந்த கலவை ஆறியவுடன் அதில் வைட்டமின் ஈ மாத்திரை, தேன், தேன் மெழுகு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
- கடைசியாக கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தயாரித்த இந்த கலவையை ஒரு ஈரம் இல்லாத டப்பாவில் சேர்த்து பிரிஜ்ஜில் 3 மணி நேரத்திற்கு வைக்கவும். அவ்வளவுதான் லிப் பாம் தயார் இதை தினமும் உங்கள் உதடுகளில் தடவி வரலாம்.
இப்படி இயற்கை முறையில் தயாரிக்கும் லிப் பாம் உங்கள் உதடுகளை ஈரப்பதமாகவும், மென்மையாகவும், உதடுகளுக்கு சிவப்பழகு அளிக்கச்செய்கிறது. நீங்களும் இந்த முறையை பயன்படுத்தி உங்கள் உதடுகளை அழகாக்குங்கள்.