முகத்தை அழகாக்கும் பீட்ருட்..!! இதை ட்ரை பண்ணி பாருங்க..!!
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் வெள்ளையாக மாற பீட்ரூட்டை வைத்து எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…
இதற்கு தேவையான பொருட்கள் என்ன என்பதை பார்கலாம் :
பீட்ரூட்- 1
தயிர்- 2 ஸ்பூன்
தேன்- 1 ஸ்பூன்
1.ஒரு பீட்ரூட்டை எடுத்து நன்கு அரைத்து அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
2. அடுத்து அரைத்த பீட்ரூட்டில் தயிர் மற்றும் தேன் சேர்க்கவும்.
பின் இந்த பொருட்களை நன்றாக கலந்து, பேஸ்ட்டை போல் முகத்தில் சமமாக தடவவும்.
3. அதன் பின்னர் 20 நிமிடங்கள் விட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி முகத்தை உலர வைக்கவும்.
4. இதை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் முகம் பொழிவாக இருக்கும்
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை மற்றவர்களுக்கும் பகீர்ந்திடுங்கள்..