ஒரு வேலையா நம்ப சரியா பண்ணா அதுக்கான பலன் நமக்கு இப்படி கூட கிடைக்கும்.. குட்டி ஸ்டோரி-19
ஒரு சின்ன பையன் சிக்னல்ல எல்லா வண்டியையும் தொடைக்குற வேலைய பாக்குறான், ஒரு நாள் பணக்கார மனிதரின் காரை தொடைக்கும் போது.., அவரு காசு கொடுக்காம போயிறாரு..,
ஆனா ஒரு சில வண்டிக்காரங்க காசு கொடுக்குறாங்க.. அந்த பையனும் அத பொருட் படுத்தாம தினமும் அந்த பணக்காரர் காரை அவன் தொடச்சுகிட்டே இருக்கான்…
அவன் கூட இருக்க தோழன் கேட்க்குறான் ஏண்டா அவரு தான் உனக்கு காசு தர மாற்றரே ஏன் அவரு வண்டியை போய் தொடச்சிட்டு இருக்க அப்படினு கேட்க்குறான்..
அதுக்கு அந்த பையன் சொல்லுறான்.., இல்ல எனக்கு பிடிச்சுதான் நான் இந்த வேலைய செய்யுறன்.., அவரு காசு கொடுக்கலானாலும் பரவாயில்ல அப்படினு சொல்லுறான்..
ஒருநாள் அந்த பணக்காரர். கார் தொடைக்குற பையன கூப்பிட்டு கேட்குறாரு..
தம்பி நான் தினமும் உனக்கு காசு கொடுக்காம தானே போறன்.., அப்புறம் ஏன் நீ தினமும் ஏன் வண்டிய தொடைக்குற அப்படினு கேட்குறாரு
அதுக்கு அந்த பையன் சொல்லுறான்.., நீங்க காசு கொடுப்பிங்கனு நான் இந்த வேலைய செய்யல.. நம்ப இருக்க இடத்தை சுத்தமா வெச்சிட்டு இருந்தா எல்லாமே வரும் அதுனால தான் தொடைக்குறன் அப்படினு சொல்லுறன்..
இந்த பையன் சொன்ன வார்த்தைய கேட்ட அந்த பணக்கறாரு சரிப்பா நீ நாளையில இருந்து வேலைக்கு வந்துரு அப்படினு சொல்லுறாரு..
இவனும் அங்க வேலைக்கு போறான்.., அப்புறம் அங்க இருக்குற காருக்கு எல்லாம் செக்கூரிட்டி வேலையை கொடுக்குறாரு..
இதுல இருந்து என்ன தெரியுதுன்னா..?
நாம்ப நம்ப வேலைய கரெக்டா செஞ்சிட்டு இருந்தா அதுக்கான பலன் கண்டிப்பா ஒருநாள் நமக்கு கிடைக்கும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..