ஆண்-பெண் நட்புக்கு இலக்கணமாய் அமைந்த பிரியமான தோழி… 21 ஆண்டுகள்..!
இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரியமான தோழி. இந்த படத்தில் மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி விஜயகுமார், விவேக், மணிவண்ணன், வினீத், லிவிங்க்ஸ்டன், ரமேஷ் கண்ணா, நிரோஷா, ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்த இப்படத்திற்கு பா.விஜய் மற்றும் கலைகுமார் பாடல்களை எழுதியுள்ளனர்.
கதை சுருக்கம்:
காதல், நம்பிக்கை, ஆண், பெண் நட்புக்கான அர்த்தம் என அனைத்தும் சொன்ன திரைப்படம் பிரியமான தோழி .
ஆண்-பெண் நட்புக்கு இலக்கணமாய் அமைந்த இந்தப்படம் வெளியானபோது நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றது.
நிரோஷா மற்றும் லிவிங்ஸ்டனின் காமெடி கண்டு சிரிக்காதவர்கள் யாரும் இல்லை.
பாடல்:
இந்த படத்தில் இடம் பெற்ற மான் குட்டியே புள்ளி மான் குட்டியே, பெண்ணே நீயும் பெண்ணா? பெண்ணாகிய ஓவியம், காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா, வானம் என்ன வானம் தொட்டுவிடலாம், ரோஜாக்களே, எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய், அட இத்தனை பேரழகா? ஆகிய அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதேஒரு பறவை மோதி கோபுரம் தான் சாய்ந்திட கூடாதே தோழனே தோழனே
ஓவியன் கை வலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வழியிலும்
சாதனை உள்ளது…
20 ஆண்டுகள் நிறைவு:
நட்பின் ஆழம் மற்றும் காதல் தரும் நம்பிக்கை என இரண்டையும் இப்படம் கூறியிருக்கும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவி, மாதவன் மற்றும் ஜோதிகா என மூவருக்குமே நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இந்த படத்தில் நெகட்டிவ் என்று சொல்ல வாய்ப்பே கொடுக்கதா அளவிற்கு இயக்குர் விக்ரமன் எடுத்துள்ளார்.
தற்போது பிரியமான தோழி திரப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெற்று 21 ஆண்டுகள் தொடங்கியுள்ளது.
-பவானி கார்த்திக்