புரட்டாசி ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்..!!
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிகவும் விசேஷமான மான மாதம் என சொல்லலாம்., பெருமாளுக்கு மட்டுமின்றி இந்த மாதம் நம்முடைய வழிபாட்டு தெய்வங்களுக்கும் மிகவும் விசேஷமான மாதம்.. அப்படி பல சிறப்புகள் கொடுக்கும் இந்த மாதத்தில் புரட்டாசி சனி., புரட்டாசி வெள்ளி., புரட்டாசி அமாவாசை மற்றும் ஏகாதசி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமான நாள் என சொல்லலாம்.. அப்படியாக இந்த நாளில் நாம் வழிபட்டால் நமக்கு இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீக உண்மை..
இன்று புரட்டாசி ஏகாதசி இன்றைய நாளில் நாம் விரதம் இருந்து வழிபடுவது இன்னும் சிறந்த பலன்களை கொடுக்கும் .. இந்த விரத வழிபாட்டை பற்றி முழுமையாக படிக்கலாம்
ஏகாதசி விரதமானது மிக முக்கியமான ஒரு விரதம் ஆகும்.. நேற்று இரவு தொடங்கிய ஏகாதசி.. இன்று காலை 11:48 மணியுடன் முடிகிறது..
ஒவ்வொரு விரதத்திற்கு பின்னும் பல ஐதீக வரலாறுகள் இருக்கும். அப்படியாக இன்றைய நாளில் நாம் மனதார சில விஷயங்களை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும்.
மேலும் வளர்பிறை ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் பொழுது நாம் சில உணவுகளை எடுத்து கொள்ளலாம்,மற்றும் சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது. இந்த புரட்டாசி வளர்பிறை ஏகாதசியை “பத்மநாபா’’ ஏகாதசி என சொல்லுவார்கள்.
விரதம் இருக்கும் முறை :
இன்றைய நாளில் விரதம் இருப்பவர்கள் தயிர் சாப்பிடக்கூடாது.
அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்..
இந்த விரதத்தை முழுமையாக கடைப்பிடித்தால் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம்.
இந்த விரதத்தை முழுமையாக முடித்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.
இந்த ஏகாதசி விரதத்தை முழுமையாக முடிப்பதால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீக உண்மை..
இன்றிய ஏகாதசி நாளில் தான் அரிச்சந்திரன், இந்த விரதம் இருந்து வழிபட்ட பின்னர் அவருக்கு இழந்த நாடு, மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தார் என வரலாற்று கதைகளிலும் கூறப்பட்டுள்ளது..
எனவே நாமும் இந்த நாளில் விரதம் கடைபிடித்தால் பெருமாளின் அருள் கிடைப்பதோடு நமது குடும்பத்துடன் மிகவும் சந்தோஷமாக வாழ்க்கை கிடைக்கும். அப்படியாக இந்த விரதம் மேற்கொள்ளவதால் நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில்., தண்ணீர் வற்றாமல் இருக்கும் மேலும் அடுத்த தலைமுறை வரை தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்பது ஐதீக உண்மை..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..