சனி பிரதோஷம் அன்று சிவனை வழிபட்டால் கிடைக்கும் பலன்..!!
ஆதியில் அமுதம் கிடைத்த போது அதில் எழுந்த ஆலகால விஷத்தை உண்டுவர் தான் சிவபெருமான். சிவபெருமான் எழுந்து ஆனந்த தாண்டவம் ஆடியபோது, ஒரு சனிக்கிழமை திரையோதசி திதி தினம்.
எனவே சனிக்கிழமை அன்று திரயோதசி திதிக்கு மகாபிரதோஷம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரதோஷம் அன்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை இறைவழிபாடு செய்து வழிபட்டால் சிறந்த பலன் கொடுக்கும்,
முக்கியமாக சிவாலயம் சென்று வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். பிரதோஷம் அன்று சிவாலயம் சென்று வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்..?
பிரதோஷம் நாளில் அனைத்து தெய்வங்களும் சிவன் சந்தியில் அவரை வழிபட எழுந்தருளுவார்கள்.., அந்த நாளில் நாம் சிவன் சன்னதியில் வைக்கும் கோரிக்கைகள்.., அந்த தெய்வங்கள் உடனே ஆசிர்வதிக்கும் என்பதும் ஐதீகம் .
சனிப்பிரதோஷம் வேளையில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும். சனிப்பிரதோஷம் அன்று வழிபாடு செய்தால். ஓர் ஆண்டு முழுவதும் பிரதோஷம் அன்று வழிபாடு செய்யும் பலன் கிடைக்கும்.
அதிலும் சனிப்பிரதோஷம் அன்று சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால் பிறந்த பிறவியின் பலன் கிடைக்கும்.. கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் உங்களின் இஷ்ட தெய்வத்தை நினைத்து மனதார வேண்டலாம்.