சீசன் 6 இல் இடம்பெற்றிருந்த ரச்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் கோபாலசாமி சீசன் 7-ல் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதேபோன்று பிரபல நடிகை ரேகா நாயர், நடிகர் பப்லூ பிரித்விராஜ் ஆகியோரும் சீசன் 7 இல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக்பாஸ் சீசன்7 எப்போது ஆரம்பிக்கும் என்கிற விபரத்தை ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், அக்டோபர் மாதம் 2 ஆவது வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.