‘பிகில்’ பாண்டியம்மாவின் வைரல் போட்டோஸ்

பிகில் படத்தின் மூலம் பிரபலமடைந்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட்லீ இயக்கிய ‘பிகில்’ படத்தில் விஜய் பயிற்சி அளிக்கும் பெண்கள் கால்பந்து அணி வீரராக நடித்தவர் இந்திரஜா. ரோபோ சங்கரின் மகளான இவர் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். இப்படத்தில் இவரின் உருவத்தை வைத்து குண்டம்மா என்று விஜய் அழைக்கும் காட்சிகளுக்கு, பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்திரஜாவின் புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், மார்டன் டிரெஸ், சேலை, சுடிதார் என விதவிதமான ஆடைகளில் மிகவும் ஸ்டைலிஷாக காணப்படுகிறார். உடல் பருமன் குறித்து சர்ச்சை எழுந்தபோது எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்தவர், தற்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

துப்பாக்கிச் சூடு:ஆணையத்தில் ஆஜராக விளக்கு கேட்கும் ரஜினி

சிம்பு – சேரன் புதிய கூட்டணி; மேஜிக் செய்யுமா?