மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் பைக் ரெஸ் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18-ஆம் தேதி இரவு இளைஞர்கள் சிலர் பைக் ரெஸில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வளையதளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து, இந்த பைக் ரெஸில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
அதன்படி,போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18-ஆம் தேதி இரவு பைக் ரெஸ் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரஹ்மதுல்லா, கல்லூரி மாணவர் முகமது சாதிக், ஆஷிக் மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 5 போரையும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையர் ஜவஹர் பீட்டர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரிடம் இருந்தும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.