Madhimugam
Exclusive Today Trending உலகம்

பில்கேட்ஸின் அதிநவீன சொகுசு கப்பல் 4,500 கோடியா?

மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகின் இரண்டாவது கோடிஸ்வரருமான பில்கேட்ஸ் வாங்கியுள்ள சொகுசு கப்பல்தான் இப்போ ஹாட் வைரல்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வருபவர் பில்கேட்ஸ். சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் பசுமை சொகுசு கப்பல்களை வாங்குவதில் அதிக முதலீடு செய்து வரும் இவர், இந்திய மதிப்பில் ரூ.4,600 கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல் ஒன்றை வாங்க சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் இந்த கப்பலில் அதிநவீன வசதிகள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.. சினோட் (Sinot) என்ற டச்சு நிறுவனத்தால் வடிவமைக்கப்படும் இந்த கப்பல் 3,750 நாட்டிகல் மைல்கள் வரம்பில், 17 knots டாப் ஸ்பீடில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கப்பலின் நீளம் 112 மீட்டர், அதாவது சுமார் 367 அடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருள் கலங்களுக்கு மின் ஆற்றலை வழங்கும் திரவ ஹைட்ரஜனால் இந்த சொகுசு கப்பல் இயங்கும் என சினோட் நிறுவனம் கூறியுள்ளது. அழகியல் சார்ந்தும் இந்த சொகுசு கப்பலை வடிவமைத்து வருவது தவிர, முழுமையாக செயல்படும் திரவ ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் கலங்களை செயல்படுத்துவதும் கூட எங்களுக்கு சவாலாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது..

5 தளங்களை கொண்ட இக்கப்பலில் 2 வி.ஐ.பி ஸ்டேரூம்கள், பிரமாண்டமான ஒரு உரிமையாளர் காட்சி அரங்கம், 14 இரட்டைக் குழு அறைகள், 2 அதிகாரி அறைகள், ஒரு கேப்டன் அறை ஆகியவைகள் இருக்கும். மேலும் உடற்பயிற்சி கூடம், ஹைட்ரோ-மசாஜ் அறை, யோகா ஸ்டுடியோ, நீச்சல் குளம் அடங்கிய சுகாதார மையம் அமைக்கப்பட உள்ளது. ஹெலிபேட்,, ஸ்பா, உட்புறக் குளம் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளை பில்கேட்ஸின் இந்த புதிய சொகுசு கப்பல் கொண்டுள்ளது.

மேலும் வட்ட வடிவமைப்பிலான அற்புத படிக்கட்டுகள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் பற்றாக்குறை காரணமாக படகில் “டீசல் பேக்அப் ” இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு காரணங்களால் இந்த சொகுசு கப்பல் 2024-க்கு முன்னர் கடலுக்குச் செல்ல வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

Related posts

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்புடைய 4 பேரிடம் தீவிர விசாரணை – சிபிசிஐடி

Digital Team

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு; அழியும் பேனா தயாரித்தவர் கைது!

Digital Team

பருவநிலை மாற்ற எதிர்ப்பு போராட்டத்துக்கு 71,000 கோடி – அமேசான் அறிவிப்பு

Digital Team

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்பு, சீனாவில் 636 பேர் பலி!

Digital Team

“பார்த்து நடந்துக்கோங்க முருகதாஸ் தம்பி” – தர்பார் விவகாரத்தில் டி.ஆர் பகீர்

Digital Team

கட்டுக்குள் வராத கொரோனா; பலி எண்ணிக்கை 1,868 ஆக அதிகரிப்பு

Digital Team
You cannot copy content of this page
Madhimugam