பாஜகவுக்கு கிடைத்த ரூ.742 கோடி பம்பர்!!!

கடந்த நிதியாண்டில் மட்டும் பா.ஜ.கவுக்கு 742 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.

20,000 ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடைகள் பெறப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில், அசோசியேஷன் டெமாக்ரடிக் ரிபாஃர்ம்ஸ் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.437 கோடி நன்கொடையாக பெற்றிருந்த பா.ஜ.க, 2018-19 ஆம் ஆண்டில் ரூ.742 கோடி நிதி திரட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தேசிய கட்சிகளுக்கு கிடைத்த 951 கோடி ரூபாயில் 5ல் 4 மடங்கு தொகை பா.ஜ.கவுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. 2017 ஆம் நிதியாண்டில் 26 கோடி ரூபாய் மட்டுமே திரட்டியிருந்த காங்கிரஸ் கட்சிக்கு, கடந்த நிதியாண்டில் 148 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எல்க்டோரல் டிரஸ்ட் அமைப்பின் மூலம் மட்டும் பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு 455 கோடி ரூபாய் நன்கொடை கொடுக்கப்பட்டுள்ளது.

What do you think?

கொரோனா அச்சுறுத்தல்; வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை!

2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைவு : திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து!