மக்களின் வயிற்றில் அடிக்கும் பாஜக..! துரை வைகோ வெளியிட்ட பகீர் தகவல்..!!
மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் பாஜக அரசு நாளுக்கு நாள் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.., நூறுநாள் திட்டத்தை பாஜக அரசு முடக்க நினைக்கிறது இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய மக்களின் கோபத்திற்கு பாஜக.. ஆளாகிவிட்டது.., என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும்.., உள்ள கிராம புறங்களில் ஏழை மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது,
கடந்த 2005ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த நல்ல திட்டத்தின் மூலம் கிராம புரங்களில் வேலை வாய்ப்பு திட்டம் அதிகரித்து.
இந்த திட்டத்தின் மூலம் பல கிராம பெண்கள் அதிக அளவில் பயன் பெற்றார்கள்.., இதனால் மக்களின் வாழ்வாதாரம் மாற தொடங்கியது.
நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பதிவு செய்துள்ளனர்.., நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என்றால் 2.7 இலட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஆனால் ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது வெறும் 60,000 கோடி நிதி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இந்த 60ஆயிரம் கோடி நிதி கடந்த ஆண்டு நிதியை விட 21% விழுக்காடு குறைந்துள்ளது.
இந்த திட்டத்தில் பெரும்பாலும் கிராமப்புற, பட்டியலின, பழங்குடியின பெண்கள் தான் அதிக அளவில் பயன் அடைந்துள்ளனர்..
ஒன்றிய பாஜக அரசின் நிதி குறைப்பால் இவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
நிதி குறைப்பு ஒருபக்கம் இருக்க, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என சமீபத்தில் பேசியிருக்கிறார்..
இதை மதிமுக வன்மையாக கண்டிக்கிறது.., மக்களின் வாழ்கையை நினைத்து பார்த்து பாஜக.. செயல்பட வேண்டும். என மதிமுக துரை வைகோ பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..