குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் இரண்டு தேசிய கட்சிகளும் ஒரு ஒரு மாநிலத்தில் வென்றுள்ளனர்.மேலும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மீ வென்றுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் வருகிற நாடாளுமனற்ற தேர்தலின் முடிவுகளை பிரதிபலிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வந்த நிலையில் தலா ஒரு மாநிலங்களை வென்றுள்ளனர்.
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கடந்த 12ம் தேதி சட்டசபை தேர்தலும் குஜராத் மாநிலத்தில் கடந்த 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டமாவும் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று இரு மாநிலங்களின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாகு எண்ணிக்கை தொடங்கிய முதலே குஜராத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மட்டும் பாஜக விற்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வந்த நிலையே இருந்தது. வாக்கு எண்ணிக்கை இறுதியில் இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும் பாஜக 25 இடங்களிலும் மற்ற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதன் மூலம் பாஜகவின் ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஒரே கட்சி மீண்டும் தன் ஆட்சியை தக்க வைக்க முடியாமல் போனது.
குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் 183 தொகுதிகளை கொண்ட இந்த மாநில தேர்தல் முடிவுகள் பாஜக கட்சியை பிரமாண்ட சாதனை வெற்றி பெற வைத்துள்ளது. 150 இடங்களுக்கு மேல் வென்று குஜராத்தில் அதிக தொகுதிகள் வென்ற கட்சியாக சாதனை புரிந்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக 7 சட்டப்பேரவை தேர்தலில் வேண்டும் சாதனை புரிந்துள்ளது. இந்த குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடு வீழ்ச்சியை கண்டுள்ளது. புதிதாக வந்த ஆம் ஆத்மீ கணிசமான வாக்குகளை பெற்று சில தொகுதிகளிலும் வென்றுள்ளது.
மேலும் இது தவிர 6 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக கட்சி ஒரே ஒரு தொகுதியை மட்டுமே வென்றது. மீண்டும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மீ வென்று புதிய தேசிய கட்சியா அறிமுகப்புடுத்திக்கொண்டுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பாஜக குஜராத் தேர்தலில் மற்றும் பிரமாண்ட வெற்றி பெற்று மேலும் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை இழந்து, டெல்லி மாற்று மற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் தோல்வி அடைந்துள்ளது. இது இந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் என்று அரசியல் நிபுணர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் காங்கிரஸ் புதிதாக இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தாலும் குஜராத் மாநிலத்தில் படு தோல்வி அடைந்துள்ளது. மேலும் குஜராத் மாநில தேர்தலில் ராகுல் காந்தி பிரச்சாரம் போதுமான பிரச்சாரம் செய்யவில்லை என்ற குற்றசாட்டும் இருந்து வருகிறது. ஆனால் இமாச்சல பிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் தேர்தல் வியூகம் பலித்துள்ளதால் இது அவரின் முதல் அரசியல் வெற்றியாக பார்ப்படுகிறது. ஆம் ஆத்மீ கட்சி டெல்லி,பஞ்சாப் தேர்தலிகளில் வென்ற உத்வேகத்தில் குஜராத் தேர்தலில் களம் கண்டது இருப்பினும் சொற்ப அளவிலான ஓட்டுகளையே பெற்றாலும் இது ஆம் ஆத்மீ கட்சியின் வளர்ச்சியாகவே பார்ப்பதும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.