தோல்வி பயத்தில் பாஜக..!! ஒரு ஓட்டுக்கூட பாஜகவிற்கு கிடையாது என சொன்ன மாநிலம்..!!
வட இந்தியா முழுவதும் பாஜக விற்கு எதிரான மனநிலை காணப்படுவதாக பல செய்திதாள் மற்றும் ஊடகங்கில் வெளியாகும் செய்திகளை சுட்டி காட்டி பலரும் பாஜகவிற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக கடவூர் உத்தரப் பிரதேசத்தில் 64 இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ராஜ் பூத் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் மகாபஞ்யத்தை ஷாஹாரன்பூரில் அப்பகுதி மக்கள் கூடி இனி நாங்கள் பாஜக விற்கு வாக்களிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த கட்ட கூட்டம் மீரட், காஷியபூர் பகுதியில் நடைபெற போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் பாஜகவிற்கு பேர் அதிர்ச்சியை கொடுதுள்ளது. மேலும் பாஜக வின் தலைமையை பெரும் பீதியில் ஆழ்த்தி இருப்பதாக தெரிகிறது. அதேநேரத்தில் ராஜ் பூத் சமூகத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்து வரும் நிலையில் யோகி மலைவாழ் ராஜபூத் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே தான் உயர் சாதி ராஜ வம்சத்தைச் சேர்ந்த பெரும்பாலான ராஜ்பூத் தலைவர்கள் அறிவிப்பு மற்றும் விளம்பர பதாகைகள் மூலம் பெரும் பின்னடைவை இந்த தேர்தலில் பிஜேபிக்கு ஏற்படும் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
உத்திரப்பிரேதசத்தில் ஒரு ஓட்டு கூட இனி நமக்கு கிடைக்கப் போவதில்லை என தெரிந்து கொண்ட பாஜக இங்கே இருந்து பிரச்சாரம் செய்வதை விட மற்ற இடத்தில் நின்று பிரச்சாரம் செய்து டெபாசிட் ஆவது காப்பற்றி கொள்ளலாம் என நினைத்து தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆனால் இங்கேயும் பாஜகவிற்கு தோல்வி பயம் மனதில் புகுந்து விட்டது. நயினார் நாகேந்திரன் முதல் பல பிரச்சனை ஒவ்வொன்றாக மக்களின் முன் வெளிப்படுவதால் பாஜக வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..