சர்வாதிகார ஆட்சியை அமைக்க இருக்கும் பாஜக..! ஸ்டாலின் கொடுத்த பதிலடி..!!
ஆர்.எஸ்.எஸ். விரும்பும் சர்வாதிகார ஆட்சியை அமைக்க பாஜக முயற்சித்து வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற பெயரில் தனி இணையதளம் தொடங்கி ஆடியோக்களை வெளியிட்டு வருகிறது.
இந்த வகையில் “மாநில சுயாட்சி உண்மையான கூட்டுறவு கூட்டாட்சிக்கான எனது குரல்” என்ற தலைப்பின் கீழ் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியாவின் 3 வது எபிசோடில் பேசியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியாவை இந்தியா கூட்டணியிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்
மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பாஜக நினைப்பதாக தெரிவித்த அவர், சிஏஜி மூலம் பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்திய அதிகாரிகளை விரைவாக கூண்டோடு பாஜக அரசு மாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
இந்திய ஜனநாயக அமைப்பை பாஜக அரசு சிதைப்பதாக தெரிவித்த அவர், மாநிலங்க ளை காப்போம், இந்தியாவை காப்போம், இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம் என கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..