ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் பாஜக..! அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு..!
மாநிலங்களுக்கு நிதி வழங்குவதே சான்று ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் மத்திய பாஜ அரசு என தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் , கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் கடந்த 7 ஆண்டுகளில், பாஜக ஆளும் உத்தரபிரதேசத்துக்கும், குஜராத்துக்கும் தலா 400 கோடிக்கு மேல் தந்து தாராளம் காட்டியிருக்கிற மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு வெறும் 20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத்துறையின் முகமாக தமிழ்நாடு மாறி வருவதாகவும் விளையாட்டுத்துறையில் இத்தனை ஆக்கப்பூர்வமாக செயல்படும் தமிழ்நாட்டுக்கு வெறும் 20 கோடியை மட்டும் ஒதுக்கியிருப்பதை நம் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் எனவும் இது தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டும் பாசிச பாஜவின் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர் வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை ஒன்றிய பாஜ அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அமைச்சர் உதயநிதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..