தேர்தல் திட்டத்தில் சொதப்பிய பாஜக..!! தாமரைக்கு என்ன தான் ஆச்சு..? மோடி செய்த 5 தவறு..!
இந்திய அரசியல் தேர்தலில் தேர்தல் யுக்திகளை மாற்றியமைப்பதில் பாஜக முதல் இடத்தில் இருக்கிறது என சொல்லலாம்.., அதற்காக நாம் பாஜகவை பாராட்டியே ஆக வேண்டும் என சொல்லாம்.., தேர்தல் பிரச்சாரங்களில் கூட பாஜக இத்தனை காலம் என்ன செய்ததோ அதை இப்போது இன்னும் மோசமாக மாற்றிவிட்டது என சொல்லலாம்.
தேர்தல் அறிக்கைகைகள் திட்ட மிடுவதில் பின் தங்கி இருந்த பாஜக தற்போது மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது., அதவாது “பிராண்ட் மோடி” என பாஜக ஆரம்பித்தது தற்போது பாஜாகாவிற்கு திரும்பிவிட்டது.., இதனால் பாஜகவிடையே பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் லோக்சபா தேர்தலில் இதுவரை பாஜக 5 தவறுகளை செய்துள்ளது.., அது என்னவென்று பார்க்கலாம்.
1. லோக்சபா தேர்தல் அறிவிப்புகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பின் பாஜக தேர்தலில் எப்படி வெற்றி பெறலாம் என்பது பற்றி அவை சரியாக திட்டமிடவில்லை. தேர்தலின் முதல் 3 கட்டங்களை தெற்கில் நடத்த திட்டமிட்ட பாஜக என்ன பேச வேண்டும் எப்படி செய்லபட வேண்டும் என்பது பற்றி திட்டமிடவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
2. பாஜகவில் இந்த முறை வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆர்எஸ்எஸ் உடன் ஆலோசனையே செய்யவில்லை. எனவே பல தொகுதிகளில் ஆர்எஸ்எஸ் – பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பு பல தொகுதிகளில் மோடிக்காக வேலை பார்க்காமல் இருந்தனர்..
3. பாஜகவின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் ராஜ்புத் சமூகம் உள்ளிட்ட சத்திரிய சமூகத்தை கடுமையாக விமர்சித்ததால் அவர்கள் பாஜக மீது கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ராஜ்புத் சமூகத்தின் மகாபஞ்சாயத், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள முதல்கட்ட பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்தது. அதற்கான அறிக்கையும் வெளியானது..
அதன் பின் வேலையின்மை, அக்னிவீர் திட்டம் மற்றும் ராஜ்புத் சமாஜ் அவமதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் அவர்கள் பாஜகவில் இருந்து வெளியேற முடிவு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது நாங்கள் யோகியை எதிர்க்கவில்லை டெல்லியில் இருக்கும் பாஜகவின் பெரிய தலைகளை எதிர்க்கிறோம். என அவர்கள் கூறியுள்ளனர்.
சிவால் காஸ் (பாக்பத்), சர்தானா (மீரட்) மற்றும் கட்டௌலி (முசாபர்நகர்) ஆகிய தொகுதிகளின் கீழ் வரும் 24 கிராமங்களின் கூட்டமைப்பான “சௌபிசி” ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகா பஞ்சாயத்தின் போது, ராஜ்புத் அதிகாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக சமாஜ்வாதி வேட்பாளருக்கு மட்டுமே தங்களின் ஆதரவை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்து உள்ளனர்.
மேலும் அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும், ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த வி.பி.சிங் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு ஏன் இன்னும் பாரத ரத்னா வழங்கப்படவில்லை என்றும் பஞ்சாயத்தில் சண்டையிட்டுள்ளனர். பிஜேபிக்கு வாக்களிக்க கூடாது என்றும் பஞ்சாயத்து முடிவு செய்திருப்பது குறிப்பிடதக்கது.
4. குறிப்பாக பிரதமர் மோடி நேரடியாக இஸ்லாமியர்களை தாக்கி பேசுவது பெரும் சர்சையையே ஏற்படுத்தி வருகிறது., மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி , ஒடிசா போன்ற மாநிலங்களில் பாஜக மீது கடும் கோபம் திரும்பிவிட்டது என சொல்லலாம்.
5 . இதுவரை இந்தியாவில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.., ஆனால் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்ட ஒவ்வொரு மாநிலத்திலும் இஸ்லாமியர்களை பற்றி அவதூறாக பேசுவது அடுத்த நாளே இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசுவது என பிரதமர் மோடி மாறி மாறி பேசியுள்ளார்..
ஒருநாள் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை பற்றி பேசும் மோடி மறுநாளே அதை பற்றி பேசாதது போல மாற்றி விடுகிறார். இதுபற்றி மோடி கூறியதாவது பிரச்சாரம் செய்ய சரியான ஆட்கள் இல்லாததால் அம்பானி, அதானியை எதிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..