ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்றார்..
ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பஜன்லால் சர்மா இன்று பதவியேற்றுக்கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில் ஒரு வேட்பாளர் உயிரிழந்த நிலையில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தல் முடிவுகளில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றிப்பெற்ற நிலையில், ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராக பஜன் லால் சர்மா இன்று பதவியேற்றார்.
ஜெய்ப்பூரில் உள்ள ராம்நிவாஸ் அரங்கில் நடந்த விழாவில் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பாஜக எம்எல்ஏக்களான தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் விழாவில் கலந்துகொண்டார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.