பாஜக NDA கூட்டணி..!! கோழை தனமான அரசியலா..? பாஜக பிளான் தோல்வி..?
இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளநிலையில் முதல் மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது.., அதில் முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று முடிந்தது..
2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களிலும் வெற்றிபெறுவோம் என பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை பேசி வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியாது என கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆம் உத்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான உயர் திரு.அகிலேஷ் யாதவ் மீது திட்டமிட்டு செருப்புகள் வீச்சு இதன் மூலம் பகவான் கிருஷ்ணர் வம்சாவழி அவமானப்படுத்தும் செயல் அரங்கேறியுள்ளது.,
இதற்கான காரணம் குறித்து விவரித்தபோது பிஜேபி யின் தோல்வி பயம் என தெளிவாக தெரிகிறது என மற்ற கட்சியினரும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பகவத் கீதை பற்றி பேசுவதும், ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்புவதும் பிஜேபி NDA கூட்டணிக்கு சிறிதும் தகுதிகள் இல்லை என விமர்சித்து வருகின்றனர்.
அரசியல் களத்தில் பிஜேபியை எதிர்க்கும் கட்சிகள் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்துவது.., எதிர்த்து கேள்வி கேட்கும் ஆம் ஆத் மீ கட்சி தலைவர் மீது நேரடியாக தாக்குதல் நடத்துவது..? அதற்கு பெயர் என்ன..? இது தான் ராமாயணமா அல்லது மகாபாரதமா..?
இப்படி தான் தர்மம் நிலைநாட்ட சொல்லி கொடுத்தார்களா..? இது தான் ஜனநாயகமா..? மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும், யாதவ அரசியல் கட்சிகளை அடக்க நினைப்பவர்களுக்கு பிஜேபி என்றும் சிம்ம சொற்பனமாக இருக்கும்.
குறிப்பாக இரண்டு யாதவ இளவரசர்கள், இந்திய செய்திகள் ஊடகங்கள் பேசியதை தாங்கி கொள்ள முடியாமல், கீழ் தரமான அரசியல் செயலில் ஈடுபடும் பாஜக மற்றும் அவர்களின் NDA கூட்டணி கட்டாயம் தோற்று போகும், அவர்களின் தோல்வி பயம் முகத்தில் தெரிவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக 443 மக்களவைத் தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு 100 இடங்களிலும் போட்டியிட்டு வருகிறது. இதுவரை எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் 3 கட்ட தேர்தலுக்கு பின் பாஜக பெரிய அளவில் சறுக்கலை சந்தித்து உள்ளதாகவே கணிப்புகள் கூறுகின்றன.
இந்த சமயத்தில் தான் பாஜக ஒரு பிளான் போட்டுள்ளது.., 2024 லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாஜகவின் கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம், அதிமுக போன்ற கட்சிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் – திமுக கூட்டணி மிகவும் ஸ்ட்ராங் ஆக இருப்பதால் அவை உடைய வாய்ப்பே இல்லை என்பதால் திமுக மற்றும் மதிமுக, விசிக, கூட்டணி கட்சிகளை தவிர்த்து தவிர்த்து மற்ற கட்சியினரிடம் பாஜக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு தகவல் கசிந்துள்ளது ..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..