தேசியக்கொடி ஏந்தி படகில் செல்ல பிஜேபி மாநில செயலாளர் வினோத் செல்வத்திற்கு மறுப்பு..! பழவேற்காடு லைட்ஹவுஸில் சாலை மறியல்..!!
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் முகத்து வாரத்தை பார்வையிட சென்ற பிஜேபி மாநில செயலாளர் வினோத் செல்வத்தை தேசியக்கொடி ஏந்தி படகில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினர் மற்றும் பாஜகவினுடைய தள்ளுமுள்ளு அதன் பின் பழவேற்காடு லைட்ஹவுஸ் சாலையில் சாலை மறியல்.
பிஜேபி மாநில செயலாளர் மனோஜ் செல்வம் தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது.
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் முகத்துவாரத்தை பி.ஜே.பி மாநில செயலாளர் வினோத் செல்வம், மாநில நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மாவட்ட நிர்வாகி செந்தில்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தேசியக்கொடியை படகில் ஏந்தி முகத்துவாரம் வரை சென்று பார்த்துவிட்டு வர திட்டமிட்டு பழவேற்காடு மீன் ஏல கூட அருகில் உள்ள படகுகளில் ஏற சென்றனர்.
அப்பொழுது பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் தேசியக்கொடி ஏந்தி செல்ல வேண்டாம் எனவும் பொன்னேரி டிஎஸ்பி கிரியாசக்தி தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் பழவேற்காடு ஏரிக்கரை பகுதியில் இருந்து பழவேற்காடு லைட் ஹவுஸ் மேம்பாலம் அருகே சாலைக்கு வந்த பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தேசியக் கொடியை ஏந்தி செல்ல அனுமதி வழங்காத காவல்துறையை கண்டித்தும் போலீஸ் அராஜகம் ஒழிக எனவும் சத்தமிட்டு கோஷங்களை எழுப்பினர்.
இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படவே 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதனால் பழவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக மாநில செயலாளர் வினோத் செல்வம் மற்றும் தேசிய சிறுபான்மை நல்ல பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பழவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 6 மணி ஆகியும் வெளியே விடாத காரணத்தினால் பாஜகவினர் மீண்டும் பழவேற்காடு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..