பாசங்கு வேலை செய்யும் பாஜக..! அகிலேஷ் யாதவ் வைத்த குற்றச்சாட்டு..!
இட ஒதுக்கீட்டை அடிப்படையாக கருத்தில் கொண்டு அதற்கு எதிராக பாஜக செயல்படுவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை மக்களின் கல்வி நிலையை சுட்டிக்காட்டி, விளிம்புநிலை மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்…
“பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினத்தோர், முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டில் பாசாங்கு வேலையைச் செய்கிறது.
கல்வி நிலையங்களில் உள்ள பணியிடங்களை பிரதிநிதித்துவப்படுத்து நபர்களின் எண்ணிக்கையில் மேற்சொன்ன சமூகத்தினர் குறைவாகவே உள்ளனர்.
இந்த சமூகத்தை சார்ந்த யாரேனும் ஒருவர் கூட துணை வேந்தர்களாக இல்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 15 சதவீதத்துக்கும் குறைவான பணியாளர்களே இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு சாதகமாக எதையும் பாஜக செய்யவில்லை. இடஒதுக்கீட்டின் அடிப்படைகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..