CAA: கொல்கத்தாவை அதிரவைத்த GoBack Amit Shah

தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா சகித்துக்கொள்ளாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொல்கத்தாவிற்கு ஒருநாள் பயணம் சென்றுள்ளார். அங்கு, ஷாஹித் மினார் மைதானத்தில் சிஏஏவுக்கு ஆதரவாக 1 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணியிலும் அவர் கலந்து கொள்கிறார்.

ராஜர்ஹாட்டில் தேசிய பாதுகாப்புப் படையினருக்கான புதிய கட்டடத்தை அமித் ஷா திறந்து வைத்து அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “உலகின் தலை சிறந்த பாதுகாப்பு படைகளில் ஒன்றாக NSG-யை உருவாக்குவதே அரசின் இலக்கு” எனக் கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இணையாக இந்தியாவும் முன்னேறியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், தீவிரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது எனவும் அவர் கூறினார்.

இதனிடையே, அமித் ஷாவின் வருகையை எதிர்த்து கொல்கத்தாவில் இடதுசாரி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு கோ பேக் அமித் ஷா என்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.

What do you think?

Ind-Nz Test: கோலி ஏமாற்றம்; இந்தியா தடுமாற்றம் – 2வது டெஸ்டிலும் தொடரும் சோகம்

சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் எழுத்தர்களும் நிலத்தரகர்களும் நுழைய தடை