“கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு..” மாளவிகா 45..!
மாளவிகா:
இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மாளவிகா. தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.
பெங்களூருவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை மாளவிகா அவருடைய 19 வயதில் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
முதல் படம்:
நடிகை மாளவிகா 1999 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த உன்னைத் தேடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மாளவிகா நடித்து இருந்தார்.
முதல் படமே மாபெரும் ஹிட் அடித்தது. குறிப்பாக நீதான நீதான என் அன்பே நீதானா என்ற பாடல் இளைஞ்ர்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, வெற்றிக்கொடி கட்டு, ஐயா, சந்திரமுகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இருப்பினும் தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், சில படங்களில் நடித்துவிட்டு தெலுங்கிற்கு மாறினார் . இதற்கிடையில் தமிழில் சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்:
மளாவிகா என்றதும் சட்டென நினைவில் வருவது சித்திரம் பேசுதடி படத்தில் இடம் பெற்ற வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் தான். தில் மாளவிக்காவின் நடனம் வரவேற்ப்பை பெற்றது.
அதை வெற்றிகொடிகட்டு திரைபடத்திலும் இடம்பெற்ற கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் இன்றைக்கும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.
உன்ன கண்ட நாள் முதல வச்ச பொட்டும் கருப்பு தான் ரெட்டை ஜெடை பின்னலுல கட்டும் ரிப்பன் கருப்பு தான்..
திருமண வாழ்க்கை:
2007-ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில இருந்து விலகிய இவர் தனது குடும்பத்துடம் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடத்த நடிகை மாளவிகா தனது 45வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மதிமுகம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-பவானி கார்த்திக்