பிளாக் ஹெட்ஸ் நீக்கும் ஃபேஸ் ஸ்கரப் ; இனி வீட்டிலேயே..!!
எவ்வளவு தான் முகத்தை அழகாக வைத்தாலும்.., சில பிளாக் ஹெட்ஸ் முகத்தின் அழகை கெடுத்து விடும். முக்கியமாக எண்ணெய் பிசுபிசுப்பு சருமம் உள்ளவர்கள். சருமத்துளைகள் அழுக்குகள், இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பால் ஏற்படும் அடைகள் போன்றவற்றால் ஒயிட் ஹெட்ஸ் உருவாகிறது.
ஆனால் இந்த பிரச்சனையை சரி செய்வது மிக சுலபம்..,
* பேக்கிங் சோடாவில் தண்ணீர் கலந்து கெட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டும், பின் அதை ஒயிட்ஹெட்ஸ் உள்ள இடங்களில் மென்மையாக தடவ வேண்டும். பின் 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* எலும்பிச்சை சாற்றில் சிறிது சர்க்கரை கலந்து, முகம் முழுவதும் பூச வேண்டும். 5 நிமிடத்திற்கு பின் கழுவி விட வேண்டும். இந்த பேஸ்டை 2 நாளுக்கு ஒரு முறை முகத்தில் தடவ வேண்டும். இதனால் பிளாக் ஹெட்ஸ் மற்றும் வொயிட் ஹெட்ஸ் சுலபமாக நீங்கி விடும்.
* வாரத்திற்கு இருமுறை, ஓட்ஸை பொடி செய்து அதில் தயிர் கலந்து பேஸ்ட்டாக மாற்றி முகத்தில் ஸ்கரப் செய்து 10 நிமிடத்தில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள வெண்புள்ளிகள் மறைந்துவிடும்.
* வெள்ளரிக்காய் அல்லது கற்றாழையை அரைத்து ஸ்கரப் செய்த இடத்தில் தேய்க்க வேண்டும், இதனால் முகத்தில் உள்ள சொர சொரப்பு நீங்கி சருமம் என்றும் அழகாக இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
வெ.லோகேஸ்வரி