தெலுங்கான புலி காப்பகத்தில் முளைத்த நீல நிற காளான்தெலுங்கான புலி காப்பகத்தில் முளைத்த நீல நிற காளான்..!!
தெலுங்கானா மாநிலத்தில் காவல் புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள வனத்தில் முதல் முறையாக நீல நிற காளான் வளர்ந்துள்ளது. காளான்கள் என்றால் வெள்ளை நிறத்தில் தானே இருக்கும். இந்த காளான் என்ன நீலம் நிறத்தில் இருக்கிறது.., அதை உணவிற்கு பயன் படுத்தலாமா வேண்டாமா என ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
காளான்களில் பல வகை உண்டு அதிலும் சிப்பி காளான், மற்றும் பட்டன் காளான் இந்த வகை காளானை தான் நாம் உணவிற்கு பயன் படுத்துகிறோம். சில சமயம் மழை பெய்ததும் மரத்தில் தோன்ற கூடிய வெள்ளை வகை காளானை உணவிற்கு பயன் படுத்தக் கூடாது என்று சொல்லுவார்கள். அப்படி சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்காது.., உடல் உபாதைகள் ஏற்படும் என சொல்லுவார்கள்.
இந்நிலையில் தெலுங்கானாவில் முதல் முறையாக வானத்தில் நீல நிற காளான் முளைத்துள்ளது.., கோமாரம் பீம்.., பீம் அசீஃபாபாத் மாவட்டத்தில் உள்ள காகஸ் நகர் வனத்தில் இந்த வகை காளான்கள் முளைத்துள்ளது.
இந்த வகை காளான் குறித்து பேசிய காகஸ் நகர் வனத்துறை அதிகாரி வேணுகோபால்.
* இந்த வகை காளான்கள் பகல் நேரத்தை விட இரவில் அதிகமாக ஒளிரும் தன்மை கொண்டுள்ளது.
* இந்த வகை காளான்கள் நியூஸ்லாந்து நாட்டை சேர்ந்தவை.
* நியூஸ்லாந்து நாட்டின் ரூபாய் நோட்டில் இந்த வகை காளான்கள் இடம் பெற்றிருக்கும்.
* இந்த வகை காளான்கள் பூஞ்சை தொற்று அதிகமாக இருக்கும் எனவே இந்த வகை காளான்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த வகை காளான்கள் குறித்து இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கிறோம்.., முழு ஆய்விற்கு பின்னரே இதுபற்றி தெரிய வரும் என வனத்துறை அதிகாரி கூறினார்.