தேர்தலை புறக்கணித்து பாமக, அதிமுக, பிஜேபி கவுன்சிலர்கள் போராட்டம்..!! கலவரமான காஞ்சிபுரம்..!!
காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலை புறக்கணித்து பாமக, அதிமுக, பிஜேபி , உள்ளிட்ட 16 கவுன்சிலர்கள் பதாகைகளை ஏந்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியாக இருப்பதால் கவுன்சிலர்கள் உள்ள வார்டுகளில் எந்த அடிப்படை வசதிகளும் மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் மாநகராட்சியில் வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு தேர்தல் நடைபெற்றது. இக்குழுவில் தலைவராக மேயரும், உறுப்பினராக ஒன்பது பேர் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் மனு கொடுக்கலாம் என அந்தந்த வார்டு கவுன்சிலர் களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்கான தேர்தல், இன்று காலை மாமன்ற கூட்டம் அரங்கில் நடக்கிறது. உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர், ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்கின்றனர். எதிர்க்கட்சிகள் 16 பேர் தான் உள்ளனர், அவர்கள் போட்டியிட்டதால் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
உறுப்பினர்கள் ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்ட பின், மாநகராட்சியின் தலைவரான மேயர் தலைமையில் 9 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
எதிர்கட்சியாக உள்ள அதிமுக, பாமக, பாஜக, தமாக உள்ளிட 16 கவுன்சிலர்கள் வார்டுகளில் பணியை சரியாக செய்ய விடாமல் அதிகாரிகளும் மிரட்டுவதாகவும், விவாதத்தில் கேள்வி எழுப்பும் போது கூட்டத்தின் மேயர் பதிலளிக்காமல் குறிப்பிட்ட சில கவுன்சிலர்கள் மட்டுமே பதில் அளித்து வருவதாகவும் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகத்தில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்த்து பதாகைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே இவர்களுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களும் கோஷங்கள் எழுப்பியதால் இன்னும் பரபரப்பு ஏற்பட்டது. மாமன்ற கூட்டத்தில் ஆணையர் கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், எதிர்கட்சி கவுன்சிலர்கள் வெளியே செல்லலாம் என கூறியதை எடுத்து காவல் துறையினரை வைத்து எதிர்க்கட்சி கவுன்சிலர்களை வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சி கூட்டணி கவுன்சிலர்கள், மாநகராட்சியின் நிர்வாகத்தையும் திமுக கவுன்சிலர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தவாறு கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பெரும்பாலும் பரப்பு ஏற்படுத்தியது.