மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரும் போர்டு நிறுவனம்..! மாநில அரசுக்கு சென்ற கடிதம்..!!
3 வருடங்களுக்கு பிறகு ஃபோர்ட் மோட்டார் கம்பெனி தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது., தமிழகத்தில் இருந்து கார்களை பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஈற்பதற்காக அமெரிக்க அரசு முறை பயணம் சென்றுள்ளார்.. அமெரிக்க சென்ற நாளில் இருந்து ஒவ்வொரு தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது..
இந்த 17 நாட்கள் சுற்றுப்பயணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு மொத்தம் 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.. இதுவரையில் மொத்தம் 7,616 கோடி வரையில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது..
கடந்த 10ம் தேதி அன்று சிகாகோவில் உள்ள போர்டு நிறுவனத்தின் ஐஎம்ஜி தலைவர் கே.ஹார்ட், துணை தலைவர் (சர்வதேச அரசாங்க விவகாரங்கள்) மேத்யூ கோட்லெவ்ஸ்கி, போர்டு இந்தியா இயக்குநர் (அரசாங்க விவகாரங்கள்) டாக்டர் ஸ்ரீபாத் பட் உட்பட துறை சார்ந்த உயர் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்குவதற்கான திட்டம் குறித்து பேசியுள்ளார்…
பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு நிறுவனம் இதற்கு முன்னரே சென்னை மறைமலை நகரில் தன்னுடைய நிறுவனத்தை துவங்கியது.. இந்த நிறுவனமானது கடந்த 2௦21ம் ஆண்டு தமிழகத்தில் துவங்கப்பட்டது., அங்கு உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரக கார்களும் இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது..
அதன்பின் 3 ஆண்டுகள் கழித்து சென்னையில் மீண்டும் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான கடிதம் ஒன்றை முன்னதாகவே மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.. இந்த கடிதத்தை பெற்ற தமிழக அரசு ஆலையை தொடங்குவதற்கான முழு உற்பத்தியையும் தொடங்கியுள்ளது..
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை தொடர்பாக அந்த நிறுவனம், ‛‛உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தேவையான கார் உற்பத்தியை மேற்கொள்ள இந்த பேச்சுவார்த்தை முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.. இதன்மூலம் மீண்டும் தமிழகத்தில் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி தொடங்குவதற்கான சாத்தியமான அறிகுறி தென்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு :
மறைமலைநகருக்கு வரவுள்ள ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த ஆலையை திறக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கு போர்டு நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. அதேசமயம் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..