உடல் என்பது காமம்.., உயிர் என்பது காதல்…! இவரை விட வேறு யாராலும் அழகாய் சொல்ல முடியாது..!
கொஞ்ச நாளுக்கு முன்னாடி ரொம்பவே பிரபலமானவர், இவரோட குரல் பட்டி தொட்டி எல்லாம் போய் சேந்துச்சுனு சொல்லலாம்.., இந்த பாடல் மூலமாக இன்னமும் பலபேரின் வாய்களில் முணு முணுத்து கொண்டிருக்க நீங்கள் யாரு என்று கண்டு புடுச்சிருப்பிங்க.
அவங்களோட குரலுக்கு நிறைய ரசிகர்கள் இருகாங்க, ரொம்பவே அழகான “ஸ்வேதா மோகன் ” இவங்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் மற்றும் ஆல்பம் பாடல்களும் பாடியிருக்கிறார்.
வெள்ளி திரை மட்டும் இல்லாமல் சின்னத்திரை தொடர்களுக்கும் பாடல் பாடியவர். அதிலிருந்து சில பாடல்களின் வரிகளை பார்க்கலாம் வாங்க .
அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த “கிரீடம்” படத்தில் காதல் வசப்படும் பாடல் என்று கூறலாம் நா.முத்துக்குமார் எழுதிய இந்த பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க ஸ்வேதா மோகன் பாடிய பாடல் இப்போதும் கேட்க தூண்டும்..
இதுவரை இந்த மாதிரி உணவுர்கள் என் இதயத்தில் வந்தது இல்லை , ஏனோ தெரியல இதயம் தடுமாரு கிறது. உன்னோட சிரிப்பில் நான் விழுந்துவிட்டேன் இன்னும் அதில் இருந்து வெளியவரவில்லை.
விழியில் உன் விழியில்
வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தன் என்று உயிர் சொன்னதே….
இதுவரை என் இருதயம்
இந்த உணர்வினில் தடுமாறவில்லை………
தன்னுடைய காதலியை சந்திப்பதற்கு வரும் காதலன் கனவிலே பாடிக்கொண்டு வருகிறான்., அவளை காண்பதற்கு பாரத், மீரா ஜாஸ்மின், சேர்ந்து நடித்த “நேபாளி” படத்தில் வரும் பாடல்.
இந்த பாடலை யுகபாரதி எழுத, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, சத்யன், ஸ்வேதா மோகன் இணைந்து பாடடிய பாடல் காளையாக இருந்தாலும் மாலையாக இருந்தாலும் எல்லா நேரங்களிலும் காதல் பண்ணனும், உன்னுடைய உடை தொட்டு கொண்டிருக்கும் இடத்தில என் நகம் படவேண்டும் .
கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
காலை மாலை ஆகுமே
காதல் கொள்ள வேணுமே
உடை தொட்ட இடம் விரல் தொட்டு விட
உயிர் கெஞ்சுமே…
விவரம் தெரியாமல் இருக்கும் காதலியே காதலிக்கிறான் ஹீரோ அவள் மேல் உயிராக இருக்க பெற்றோர்களால் பிரிவினை சந்திக்க அவளுடன் இருந்த நேரங்களை நினைத்து பார்க்கிறான்.
தமன்னா, சித்தார்த் வேணு கோபால் இணைந்து நடித்த திரைப்படம் “ஆனந்த தாண்டவம் ” இந்த பாடலின் வரிகளை வைரமுத்து எழுத, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க பென்னிடயல் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடிய பாடல் .
உடல் என்பது காமத்திற்காக மட்டும் இல்லாமல் காதலுக்காவும் உள்ளது , நீ பேசும் வார்த்தை எல்லாம் கவிதையாக இருக்கிறது ?
கல்லில் ஆடும் தீவே
சிறு கழக கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால்
என் கவிதை சேவல் கூவும்
அடடா
உடல் என்பது காமம்
உயிர் என்பது காதல்….
அட இந்த பாடலும் இவங்க பாடுனதா உங்களுக்கு தெரியுமா..? இந்த படம் ஒரு நல்ல கதையாக மட்டும் இல்லாமல் சிறந்த பாடல் கொடுத்தனு சொல்லலாம், ஜீவா, கார்த்திகா நாயர் இணைந்து நடித்த படம் “கோ” பாடலாசிரியர் விவேகா எழுத ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஹரிஹரன், ஸ்வேதா மோகன் & சின்மயி மூன்று பேரும் சேர்ந்து பாடிய பாடல்.
உன்னை பார்த்ததும் என் நெஞ்சில் காதல் பொங்கி வழிகிறது, கொளுத்தும் வெயிலில் எனக்கு உன்னை பார்க்கும்போது குளிர் காற்று வீசுகிறது.
அமளி துமளி நெளியும் வள்ளி…
என்னை கவ்வி கொண்டதே…
அழகு இடுப்பின் ஒரு பாதி…
என்னை அள்ளிச் சென்றதே……
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே…
குளிர் காற்றும் வீசுதே……
இவங்க இந்த பாடல் மூலமாக ரொம்ப பிரபலமானங்கனு கூட சொல்லலாம், தனுஷ் மட்டும் சம்யுக்தா இணைந்து நடித்த “வாத்தி” திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் மற்றும் ஸ்வேதா மோகன் இணந்து பாடிய பாடல் .
காதலிப்பதற்கு புத்தகம் தேவை இல்லை நான் உனக்கு சொல்லி கொடுக்கிறேன், உன்னோட பெயரை தினமும் நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஜோடியா ஊரசுத்தணும் , நல்லா கிராண்டா கல்யாணம் பண்ணிக்கணும் அப்படினு அந்த காதலி பாடியிருப்பார்.
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
BAND வாசிச்சு
கிரேண்டா மேரேஜு
கெட்டி மேளம் எங்கும் கேக்கணும்…..
இது மட்டும் இல்லைங்க இன்னும் நிறைய பாடல்களை இவங்களோட குரலில் கேட்டிருப்பிங்க இன்னும் நிறைய பாடல்களை பாடுவாங்க “ஸ்வேதா மோகன்” பாடிய பாடலில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது..? என்று கமெண்ட் பண்ணுங்க..
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..