ADVERTISEMENT
ராகி வேர்க்கடலை அல்வா ரெசிபி..!
தேவையானவை:
கேழ்வரகு மாவு
வேர்க்கடலை – தலா 100 கிராம்
ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை
முந்திரி – 5
சர்க்கரை – கால் கிலோ
நெய் – அரை கப்
வெள்ளைப் பூசணி – 100 கிராம்
பால் – ஒரு கப்.
செய்முறை:
முதலில் ராகி மாவை ஒரு வாணலில் போட்டு வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும், பின் அதில் நறுக்கிய பூசணி துண்டுகளை சேர்த்து வேகவைக்க வேண்டும்.
அதில் நெய் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்.
ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் வேர்க்கடலை,முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை வறுத்து அதனை அல்வாவில் சேர்த்து கிளற வேண்டும்.
அவ்வளவுதான் ராகி வேர்க்கடலை அல்வா தயார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.