ரவா கேசரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..!
கோடைக்காலங்களில் முட்டைகள் சீக்கிரம் கெட்டுவிடும் அதனை தடுக்க முட்டைகளை பாத்திரத்தில் போட்டு அதில் வேப்பிலையை போட்டு வைக்கலாம்.
ரவா கேசரி செய்ய சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.
பாகற்காயை முதலில் நீரில் வேகவைத்து பின் வடிக்கட்டி எண்ணெயில் சேர்த்து வதக்கினால் மொறுமொறுவென இருக்கும், கசப்பும் தெரியாது.
வாழைப்பூவுடன் வாழைத்தண்டையும் சேர்த்து பொரியல் செய்தால் வித்தியாசமான சுவையில் பொரியல் இருக்கும்.
மோர் குழம்பில் வேகவைத்த உருளைக்கிழங்கை வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும். குழம்பும் கெட்டியாக இருக்கும்.
தேங்காய் பர்பிக்கு தேங்காய் பூ ஒரு கப், பால் இரு கப், சர்க்கரை ஒரு கப் என கலந்து செய்தால் சரியாக வரும்.
வாணலில் எண்ணெய் அழுக்கு போக அதில் சிறிது உப்பு தூள் பரப்பி சூடாக்கி பின் பேப்பரால் அழுத்தி துடைத்தால் போதும்.
ஆரஞ்சு பழத்தோலையும் பச்சை மிளகாயும் பொடி செய்து எண்ணெயில் வதக்கி வற்றல் குழம்பு வைத்தால் ருசியாக இருக்கும்.
தேங்காய் துவையலில் சிறிது தனியாவை வதக்கி சேர்த்து அரைத்தால் துவையல் சூப்பராக இருக்கும்.