‘தேனாம்பேட்டையில் பரபரப்பு’ காவல்நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்!

சென்னை தேனாம்பேட்டையில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசிய மர்ம நபர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை.

சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி சென்றுள்ளனர். அந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அருகிலிருந்த கார் மற்றும் கார் ஷோரூம் கண்ணாடிகள் உடைந்தன.

இந்த நாட்டு வெடிகுண்டை வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் தேனாம்பேட்டை சாலையில் தற்போது நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் அந்தப்பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

What do you think?

மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் மரணம்

‘தல’யின் பிறந்தநாளில் சூர்யாவின் சூரரை போற்று!