காதலியை கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன்…
சென்னையில் காதலியை கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பவுசியா என்ற இளம்பெண் சென்னை குரோம்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.
குரோம்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த இவரும், கேரளாவைச் சேர்ந்த ஆசிக் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.
இந்நிலையில், குரோம்பேட்டை விடுதியில் இருவரும் அறை எடுத்து தங்கியிருந்த போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஆசிக், காதலி பவுசியாவை கொலை செய்துள்ளார்.
பின்னர் அதை போட்டோ எடுத்து தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். இதைப் பார்த்த பவுசியாவின் தோழிகள் அந்த விடுதிக்கு அறைக்குச் சென்று பார்த்த போது, அங்கு பவுசியா சடலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் பவுசியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததை தொடர்ந்து, அங்கிருந்து தப்பிச் சென்ற ஆசிக்கை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பவுசியா, ஆசிக் இருவரும் 16 வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்றுள்ளனர். பவுசியாவின் 16 வயதில் திருமணம் நடந்ததால் போக்சோ வழக்கில் ஆசிக்கை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, குழந்தையை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த ஆசிக், அடிக்கடி பவுசியாவை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், ஆசிக் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்தது தொடர்பான புகைப்படங்களை விடுதியில் தங்கியிருந்தபோது பவுசியா பார்த்ததையடுத்து இருவருக்குமிடையே சண்டை தீவிரமடைந்துள்ளது.
அப்போது பவுசியாவை ஆசிக் தனது டி-ஷர்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.