தீவிரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் தீவிரமாக செயல்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்…!

இந்தியா – அமெரிக்க உறவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதமும், தீவிரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் தீவிரமாக செயல்படும் என அமெரிக்க அதிபர் டிரம்பும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பேசிய பிரதமர் மோடி, டிரம்ப் நீடுழி வாழ்க எனக் கூறி உரையைத் தொடங்கினார்.

அப்போது, அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகை மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும், இந்தியா – அமெரிக்க உறவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியா – அமெரிக்க உறவு மற்ற நாடுகளை போன்றதல்ல எனக் கூறிய பிரதமர் மோடி, குழந்தைகள் நல்வாழ்வுக்காக மெலானிய டிரம்ப் ஆற்றியுள்ள சேவை மகத்தானது என பாராட்டு தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,  இந்திய மக்களை அமெரிக்கா விரும்புவதாக கூறினார். அமெரிக்கர்களின் மனதில் இந்தியா மிகச்சிறப்பான இடத்தை பிடித்திருப்பதாக தெரிவித்த அவர், டீ விற்பனையாளராக இருந்து, தனது கடின உழைப்பால் மோடி நாட்டின் தலைவராகியுள்ளார் என புகழாரம் சூட்டினார். மோடியை அவ்வளவு சீக்கிரம் கனிக்க முடியாது எனத் தெரிவித்த டிரம்ப், அவர் கடினமானவர் என்று கூறினார். இந்தியா ஒரு பொருளாதார சக்தியாக உலக அரங்கில் உருவாகியுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஏழ்மை விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த டிரம்ப், 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளதாக கூறினார். ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு நன்மை தரும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் இருக்கும் எனவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

What do you think?

மதுவை கொடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 11 ஆம் வகுப்பு மாணவன் கைது…!

“அண்ணாத்த” வந்துட்டாரு – ரஜினி 168!