ஆசையாக பம்பு செட்டில் குளிக்க சென்ற சிறுவர்கள்…. மின்சாரம் தாக்கி பலி….!
விழுப்புரம் மாவட்டம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் வசித்து வந்த சிறுவர்கள் லோகேஷ், மற்றும் சப்தகிரி.
சப்தகிரி ஆறாம் வகுப்பும், லோகேஷ் மூன்றாம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் கிராமத்தில் உள்ள பம்பு செட்டில் குளிப்பதற்காக சென்றுள்ளார்கள்.
சிறுவர்கள் இருவரும் பம்பு செட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து தண்ணீரில் விழுந்துள்ளது.
இதில் பம்பு செட்டில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதைப்பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியில் கதறி துடித்தனர். பின்னர் போலீசாருக்கு புகார் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ஆசையாக பம்பு செட்டில் விளையாட சென்ற சிறுவர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்