மூளை சாவு அடைந்த இளம் பெண்.. தானம் செய்ததால் மறுவாழ்வு பெற்ற இரண்டு பேர்…!
திருப்பூர் பாராபாளையம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி புஷ்பலதா (வயது 50). தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பும் போது மங்கலம் சாலையில் பாரப்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் புஷ்பலதா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவர் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் சிகிச்சை பெற்றுவந்த புஷ்பலதா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் புஷ்பலதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
அதன் அடிப்படையில் 2 சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 2 சிறுநீரகங்கள் அகற்றப்பட்டது. அதில் ஒன்று கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும் , மற்றொன்று சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
மேலும் உறுப்புகளை தானம் செய்த புஷ்பலதாவின் உடலுக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் முதல்வர் முருகேசன் மற்றும் உயரதிகாரிகள் மரியாதை செலுத்தி அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து அரசு சார்பில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மரியாதை செலுத்தினர்.
-பவானி கார்த்திக்