மூளைச்சாவு அடைந்த இளைஞர்.. தானம் செய்யப்பட்ட உடலுறுப்பு.. 5 பேருக்கு கிடைத்த மறுவாழ்வு..
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி தாலுகா, மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (31). இவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.
மேலும் அங்குள்ள கம்பெனியில் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுரேஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ்குமார் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து, சுரேஷ்குமாரின் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க சம்மதித்தனர்.இதையடுத்து உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு, கல்லீரல் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலத்தில் உள்ள மோகன் குமாரலிங்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
இந்த உறுப்புதானம் காரணமாக 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். மேலும் உடல் உறுப்பு தானம் செய்த சுரேஷ்குமாரின் உடலுக்கு மருத்துவமனையின் டீன் நிர்மலா மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
-பவானிகார்த்திக்