மார்பக புற்றுநோய் குணப்படுத்த முடியும்..!! தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்..!!
மார்பக புற்றுநோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் விரைவில் நோயை கண்டறிந்து குணப்படுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நடைப்பயணம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நடைபயணத்தில் 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நைட்ரஜன் நிறைந்த பிங்க் பலூன் பறக்கவிட்டும் சினிமா பாடல்களுக்கும் நடனமாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்…
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகமுக்கியம் என கூறினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..