‘அவளை கண்ணீருடன் பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது’ பிரெட்லீ வேதனை!

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரெட் லீ இந்திய அணியின் இளம் வீராங்கனை ஷவாலி வர்மா இறுதிப்போட்டியில் அழுததது தொடர்பாக பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வைத்து மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து கோப்பையை இழந்தது.

Brett lee and shafali vermaக்கான பட முடிவுகள்
ஷவாலி வர்மா

இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் இளம் வீராங்கனை ஷவாலி வர்மா இறுதிப்போட்டியில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பின்பு அவர் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார் அவருக்கு சக வீராங்கனைகள் ஆறுதல் கூறினர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

Brett lee and shafali vermaக்கான பட முடிவுகள்

ஷவாலி வர்மா அழுகை குறித்து பேசியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரெட் லீ. அதில், ” கடைசியில் ஷவாலி வர்மா கண்ணீல் கண்ணீரை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால் அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடியதை நினைத்து பெருமைகொள்ள வேண்டும்.

இங்கு வந்து உங்கள் முதல் போட்டியை எதிர்கொள்வது உங்களது திறமை மற்றும் மன வலிமையை பரிசோதிப்பதாக இருக்கும். அவள் மிகச்சிறப்பாக வரப்போகிறாள்.அவள் இந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டு மீண்டும் வலுவாக வருவாள். இது போன்ற தருணங்கள் தான் நம்மை நேர்மறையான பாதைக்கு கொண்டு செல்லும். அடுத்த முறை அவள் ஆஸ்திரேலியாவிற்கு வரும் போது மிகப்பெரிய ரன்களை குவித்தாலும் ஆச்சர்யபட வேண்டாம்” என்று புகழ்ந்துள்ளார்.

What do you think?

‘சாம்பிள்ஸ் தருகிறேன்’ ஆண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது!

‘கொரோனா அறிகுறியுடைய நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்’ போலீசார் தீவிர தேடல்!