‘Work From Home’ ஒரு மாத காலத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கும் BSNL!

வீட்டிலிருந்து பணிபுரிபவர்களை ஊக்குவிக்க ஒரு மாத காலத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்க BSNL முடிவு.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வரவேண்டாம் என்றும் Work From Home எனப்படும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அனுமதியளித்துள்ளன.

இந்நிலையில் அவ்வாறு வீட்டிலிருந்து பணிபுரிபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் ஒரு மாத காலத்திற்கு பிராட்பேண்ட் சேவையை இலவசமாக அளிக்க முடிவு செய்துள்ளதாக BSNL நிறுவனத்தின் இயக்குநர் விவேக் பன்சால் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிதாக BSNL பிராட்பேண்ட் இணைப்பை பெற விரும்புபவர்கள் தொலைபேசி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் நேரில் வரவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

What do you think?

புகையும் மதுவும் கொரோனாவின் நண்பர்கள்! – உலக சுகாதார அமைப்பு

விமானத்தில் வந்தவர்களுக்கு தனி முகாம்!