“பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடும் எண்ணமில்லை” – ரவிசங்கர் பிரசாத்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடும் எண்ணமில்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

மக்களவையில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களின் தற்போதைய நிலை என்ன என வினவினார். மேலும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடையே மத்திய அரசு உருவாக்கிய அச்சம் காரணமாகவே ஏராளமானோர் வேறு சேவை நிறுவனங்களுக்கு மாறியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மரபுக்குள் செல்ல தான் விரும்ப வில்லை என்று கூறியுள்ளார். மேலும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை விற்பனை செய்யவோ மூடும் திட்டமோ மத்திய அரசிடம் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

What do you think?

வைகோவின் கேள்விக்கு பியூஷ் கோயல் பதில்

கொரோனா வைரஸ் – சென்னையில் ரயில், விமானங்கள் ரத்து!