12,000 கோடி கிடையாது, வெறும் 10,000 ரூபாய்தான் – தமிழக ரயில்வேக்கு அதிர்ச்சியளித்த மத்திய அரசு

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே துறைக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ரயில்வே வளர்ச்சி பணிகளுக்கான ஒதுக்கீட்டில் தமிழக ரயில்வே துறைக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக எம்.பி.சு.வெங்கடேசன், நாடு முழுவதும் உள்ள 17 ரயில்வே மண்டலங்களுக்கு மொத்தமாக 70,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் நடைபெறும் 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 திட்டங்களுக்கும் சேர்த்து வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அந்த திட்டங்கள் கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், உத்தரபிரதேசத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வடக்கு ரயில்வேயின் வளர்ச்சி பணிகளுக்காக 70,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு பல்வேறு தரப்பிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

டெல்லி ஜாமியா பல்கலை மாணவர்களின் பேரணியில் தள்ளுமுள்ளு

ரசிகர்களுடன் கெத்து காட்டிய விஜய் – சம்மன் அனுப்பிய வருமானவரித் துறை